யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலமையிலான குழுவினர் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டரை கிராம் ஹெரோயினுடன் ஒருவரும், ஒன்றரை கிராம் ஹெரோயினுடன் ஒருவரும், ஒரு கிராம் ஹெரோயினுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.