பாலியல் வழக்கின் குற்றவாளியான லேரி நாசரை அமெரிக்காவின் ஃபுளோரிடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சக கைதி ஒருவன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தினான்.
இரத்த வெள்ளத்தில் சாயந்த லேரி நாசரை பொலிஸ் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீராங்கனைகள் உட்பட பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் லேரி நாசர் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சக கைதியுடன் ஏற்பட்ட மோதலில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்