இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷைர் (Gloucestershire) உள்ள டெவ்க்ஸ்பரி பாடசாலையில் (Tewkesbury School) ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து, கொலைக் குற்றச்சாட்டில் அம்மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தையடுத்து, பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு ஆளான ஆசிரியர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை தற்போது தேறி வருவதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கிறது.