செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரித்தானியாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஊர்தி எழுச்சிப்பயணம்

பிரித்தானியாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஊர்தி எழுச்சிப்பயணம்

1 minutes read

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேத்தரனுக்கு (P. Ariyanethiran) ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பிரித்தானிய (UK) தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்தி எழுச்சிப்பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் படி, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரும் இந்த பயணம், தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளில் 15-09-2024( ஞாயிற்றுக்கிழமை) பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆதரவு அறிக்கை

இதேவேளை, “Roxeth recreation ground Ha2 8LF South Harrow ” இல் மாலை 2.00 மணியளவின் இப்பயணம் நிறைவடையவுள்ளதுடன் அமைப்புக்களின் ஆதரவு அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

பிரித்தானியாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஊர்தி எழுச்சிப்பயணம் | Rally In Support Of Tamil General Candidate In Uk

இந்த ஊர்திப்பயணத்தில் ஊர் அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைவரும் கலந்து கொண்டு தமிழ்த் தேசிய இனத்தின் திரட்சியாக பலத்தை நிரூபிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி – ஐபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More