பாகிஸ்தான் – சிந்து மாகாணத்தின் காஷ்மோர் நகரில் உள்ள ஒரு கோவில் மீது நேற்று மர்ம நபர்கள், ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து கோவிலை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதேவேளை, சிந்து மாகாணத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என உள்ளூரை சேர்ந்த ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.