பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாகாண ராவல்பிண்டி கோட்டத்தில் நேற்றிரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
அங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், அக்கட்டிடத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி குடிசைகள் அமைத்து தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.
சூறாவளியின் குறித்த சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து குடிசைகள் மேல் விழுந்தது.
இந்தக் கோர விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளனர்.
மேலும், 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போயியுள்ளனர் என மீட்பு சேவை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.