செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பூனை, நாய் இறைச்சிக்கு இந்தோனேசியச் சந்தையில் தடை

பூனை, நாய் இறைச்சிக்கு இந்தோனேசியச் சந்தையில் தடை

0 minutes read

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள சந்தையில் பூனை, நாய் இறைச்சியின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் பூனை, நாயுடன் வெளவால், எலி, பாம்பு, குரங்கு ஆகியவையும் விற்கப்பட்டுவந்தன.

இந்தோனேசியாவில் பூனை, நாய் இறைச்சியின் வர்த்தகத்தை நிறுத்தியிருக்கும் முதல் சந்தை இது என்று விலங்கு உரிமை அமைப்பு தெரிவித்தது.

இந்த தடை மூலம் பல்லாயிரம் விலங்குகள் காப்பாற்றப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறித்த சந்தையில் விலங்குகள் அடிக்கப்பட்டும் சுடப்பட்டும் கொல்லப்பட்டதுடன், உயிருடன் இருக்கும்போதே அவற்றின் உரோமம் எரிக்கப்பட்டதாகவும் விலங்குநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

உலகில் நாய், பூனை இறைச்சியின் விற்பனையை அனுமதிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More