பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டில், பாகிஸ்தான் மதபோதகர் ஒருவரும் அவரது ஆதரவாளரும் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய மதபோதகர் அன்ஜீம் சவுதிரி (வயது 56), இங்கிலாந்தில் பிறந்த இவர், அந்நாட்டில் குடியுரிமை பெற்று இலண்டனில் வசித்து வருகிறார்.
இவர் 2022 முதல் ஆன்லைன் மூலம் சிறிய குழுக்களுக்கு இங்கிலாந்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை நிறுவுவது குறித்து ஆலோசனை நடத்தி வந்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இஸ்லாமிக் திங்கர்ஸ் சொசைட்டி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் பெயரில் இங்கிலாந்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்து திட்டம் தீட்டியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டில், மதபோதகர் அன்ஜீம் சவுதிரியை கிழக்கு லண்டனில் வைத்து பொலிஸார் நேற்று (24) கைது செய்தனர்.
மேலும், மதபோதகர் அன்ஜீம் சவுதிரியின் கருத்துகளை கனடாவில் பரப்பிய அவரது ஆதரவாளர் ஹசனை, கனடாவில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்து வந்த நிலையில், விமான நிலையத்தில் வைத்து அவரையும் இலண்டன் பொலிஸார் கைது செய்தனர்.