இத்தாலியில் ஏற்பட்டுள்ள காலநிலை குழப்பம் காரணமாக அந்த நாட்டின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாலைகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்ததால் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மரங்கள் மேலே விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
இதற்கு நேர் மாறாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள பலேர்மோ நகரில் 48 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது.
புகை மூட்டத்தால் அருகேயுள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. காலநிலை மாற்றத்தால் இத்தாலி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.