மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் இன்று ராணுவ ஆட்சியின் கீழ் சென்று விட்டது.
கடந்த வாரம் ரொய்ட்டர் செய்தி சேவையில் அந்நாட்டு தொலைக்காட்சி சேவையில் தோன்றிய ராணுவ குழு அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என கூறி இருந்தது .
நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டு ,ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர்.என அங்குள்ள செய்தி சேவைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போது அங்கிருந்து சுட்டு கலைக்கப்பட்டுள்ளனர்.தற்போது அமைதி நிலை நிலவுவதாகவும் ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் ஐநா எதிர்ப்பை தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிட தக்கது.