யாழ்., மானிப்பாய் – கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்றிரவு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலுக்கமைய மானிப்பாய், கட்டுடைப் பகுதிக்கு விரைந்த பொலிஸார், வாள் மற்றும் கைக்கோடரியுடன் நடந்து சென்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.
29 வயதான அந்த நபர் வன்முறைச் செயலுக்காக இவ்வாறு சென்றிருக்கக் கூடும் எனச் சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், அவருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.