Moderna, Pfizer நிறுவனங்கள் அவற்றின் புதுப்பிக்கப்பட்ட COVID-19 தடுப்புமருந்துகள், புதிய BA.2.86 வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படக்கூடிய திறனைக் கொண்டவை என்று அறிவித்துள்ளன.
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் உலகச் சுகாதார நிறுவனமும் அமெரிக்கத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையமும் கண்காணித்து வருகின்றன.
Moderna தடுப்புமருந்துக்கு BA.2.86 ரக COVID-19 வைரஸை கையாள்வதற்கு 8.7 மடங்கு நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது.
அதே போல Pfizerஇன் புதுப்பிக்கப்பட்ட தடுப்புமருந்துக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது BA.2.86 வைரஸ் வகை, சுவிட்சர்லந்து,தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், டென்மார்க், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியது.