0
பாடசாலை பஸ் ஒன்றும் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ்ஸும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது பாடசாலை பஸ்ஸில் பயணித்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குளியாப்பிட்டி, ஹெட்டிபொல – கரந்திப்பல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.