சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது இதனைக் கூறிய அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவற்றை தீர விசாரிக்க வேண்டும். அதன்பின்னர்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். அதைவிடுத்து கண்ணை மூடிக்கொண்டு
தீர்மானங்களை எடுக்க முடியாது.
நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது.
கடந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மை. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிரணியினர் அன்று குளிர்காய முற்பட்டனர். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அரசின் உயர் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மொட்டுக் கட்சியின் ஆட்சி தொடர்கின்றது. நாட்டின் பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பி வருகின்றது.” – என்றார்.