இங்கிலாந்தின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற இளைஞர்கள் நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரளவு நீரில் மூழ்கிய நிலையில் காரை கண்டுபிடித்ததாகவும் இதனையடுத்து நால்வரின் சடலமும் அந்த காரில் காணப்பட்டதாக நார்த் வேல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்கல் நால்வரும் ஹார்லெக் மற்றும் போர்த்மாடோக் ஆகிய வெல்ஷ் கடற்கரைப் பகுதிகளிலிருந்து பயணம் செய்துள்ளனர் என்றும், இவர்கள் ஸ்னோடோனியா பகுதியில் அமைந்துள்ள Eryri தேசிய பூங்காவிற்கு செல்வதாக திட்டமிட்டிருந்தனர் என்றும் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர்கள் நால்வரும், நேற்று திங்கட்கிழமை பகல் வீடு வந்து சேர வேண்டியவர்கள். எனினும், எந்தத் தகவலும் இன்றி மாயமாகியுள்ளதை அடுத்து, உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தினர்.
இதனையடுத்தே, பொலிஸார் நடத்திய தேடுதலில் நீரில் மூழ்கிய காரில் இருந்து நால்வரையும் சடலமாக மீட்டுள்ளனர்.
ஒரே நாளில் நான்கு நண்பர்களின் மறைவு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.