செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கேரளாவில் கூட்ட நெரிசல்; பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மரணம்; 50 பேர் காயம்

கேரளாவில் கூட்ட நெரிசல்; பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மரணம்; 50 பேர் காயம்

1 minutes read

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் நால்வர் மரணமடைந்தனர்.

இந்தத் துயர சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

கூட்ட நெரிசலில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக The Times of India செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்ட நெரிசல்; பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மரணம்

பாடகி நிக்கித்தா காந்தியின் இசை நிகழ்ச்சி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றதாகவும் அப்போது மழை பெய்ததால் அரங்கிற்கு வெளியே காத்திருந்தவர்கள் உள்ளே நுழைய அவசரப்பட்டதில் சிலர் வழுக்கி விழுந்தனர். அத்துடன், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பாடகி நிக்கித்தா காந்தி அவரது Instagram பக்கத்தில் தாம் நிகழ்ச்சிக்குப் போவதற்கு முன்னரே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கொச்சியில் நேர்ந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் போதமாட்டா,” என்று நிக்கித்தா அதில் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More