காஸாவில் மீண்டும் மோதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் கிளர்ச்சிக் குழு, இஸ்ரேல் மீது ஏவுகணையைப் பாய்ச்சி மோதல் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் X (Twitter) சமூக ஊடகத் தளத்தில் கூறியுள்ளது.
இரு தரப்புக்கும் இடையிலான மோதல் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
மோதல் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து எந்தத் தரப்பும் தகவல் அளிக்கவில்லை.
மோதல் நிறுத்தம் முடிவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு காஸாவிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நிறுத்த உடன்பாடு நீட்டிப்பு!
7 நாள்கள் நீடித்த மோதல் நிறுத்தம் கடந்த மாதம் (நவம்பர்) 24ஆம் திகதி தொடங்கியது. இது இருமுறை நீட்டிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பிணையாளிகளும் இஸ்ரேல் சிறைகளில் இருந்த பாலஸ்தீனக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.