தென் பிலிப்பீன்ஸில் உள்ள மிண்டனாவ் (Mindanao) மாநிலப் பல்கலைக்கழகத்தில் கத்தோலிக்க வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர்.
இன்று (03) நடந்த அச்சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வெடிப்புக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களின் செயலாக அது இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
வெடிப்புச் சம்பவத்தை அந்தப் பகுதியின் ஆளுநர் கடுமையாகச் சாடினார். கல்வி நிலையத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிர்வாகமும் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.