கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் ஏராளமான தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் பாட்ஷா படத்தில் துணை வில்லனாக நடித்தமை மிகவும் பேசப்பட்டது.
நடிகர் தேவன், “கேரள மக்கள் கட்சி” என்ற பேரில் 2004இல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
2021ஆம் ஆண்டு தனது கட்சியையும் தன்னையும் பாரதிய ஜனதாவுடன் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.