யாழ்ப்பாணத்தில் தந்தை பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் தந்தை ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில், இளைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில்வதற்காகத் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.
தந்தை தனக்குப் பணம் கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்று (29) வெள்ளிக்கிழமை அந்த இளைஞர் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.