செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அரபு நாட்டு பிரஜைகள் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் இங்கிலாந்து!

அரபு நாட்டு பிரஜைகள் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் இங்கிலாந்து!

1 minutes read

சில அரபு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் விசா இல்லாமல் நுழைய (Visa Free Entry) இங்கிலாந்து அனுமதி வழங்கவுள்ளது.

அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மற்றும் Jordonஇல் வசிப்பவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் இந்த வசதி அமுல்படுத்துகிறது.

இதன்படி, Saudi Arabia, United Arab Emirates, Kuwait, Oman, Jordan மற்றும் Bahrain ஆகிய ஆறு நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இங்கிலாந்திற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை.

அதற்குப் பதிலாக, பெப்ரவரி முதல் இங்கிலாந்திற்குள் நுழைவதற்கு அவர்கள் மின்னணு பயண அங்கிகாரம் (Electronic Travel Authorization-ETA) பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டம், எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பொருந்தும் என்று இங்கிலாந்து அரசாங்கம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்பையும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேலும் மேம்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து எல்லையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஒரு பகுதியாக, புதிய ETA திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More