பச்சிலைப்பள்ளியில் ஒரு தொண்டு நிறுவனம் இல்லை என்ற குறையை நீக்கி ‘பச்சிலைப்பள்ளி கல்வி அபிவிருத்தி அறக்கட்டளை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் அ.கேதீஸ்வரனின் தலைமையில் 10 பேரை ஒன்றிணைத்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் குழு வருமாறு:-
1) அ.கேதீஸ்வரன் – தலைவர் (பளை நகரம்)
2) சி.கோகிலதர்சன் – செயலாளர் (பெரிய பளை)
3) வ.ஜீவரட்னம் – உப தலைவர் (புலோப்பளை)
4) க.சண்முகதாஸ் – உப தலைவர் (இத்தாவில்)
5) க.குகதாசன் – நிர்வாகக் குழு உறுப்பினர் (முல்லையடி)
6) கணேசலிங்கம் – நிர்வாகக் குழு உறுப்பினர் (இயக்கச்சி)
7) சி.கமலறூபன் – நிர்வாகக் குழு உறுப்பினர் (முகாவில்)
8) சுஜிதரன் – நிர்வாகக் குழு உறுப்பினர் (கிளாலி)
9) கொன்சிலஸ் – நிர்வாகக் குழு உறுப்பினர் (கிளாலி)
10) வசந்ததீபன் – நிர்வாகக் குழு உறுப்பினர் (தர்மக்கேணி)
இதன் வேலைத்திட்டங்கள் – 2024
* வறிய பள்ளி மாணவர்களுக்கு 5000/= பெறுமதியான கற்றல் பொதி 60 பேருக்கு வழங்கல்
* மிக வறுமையிலுள்ள 10 குடும்பங்களுக்கு 50,000/= வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கி தொழிலொன்றை உருவாக்குதல்
* குறைந்த சம்பளத்தில் பணி செய்யும் 10 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புத் தொகையாக மாதம் 2000/= வீதம் ஒரு வருடம் வழங்குதல்
* வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் 5000/= வீதம் இரு வருட கடன் உதவி வழங்கல்
* பல்கலைக்கழகம் செல்லும் பிள்ளைகளுக்கு 10,000/= ஒரு கட்டம் மட்டும் ஊக்குவிப்பு வழங்குதல்
* கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடாங்களுக்கு விசேட வகுப்புக்களை இலவசமாக நடத்துதல்
* தேசிய மட்ட சாதனையாளர்களைப் பாராட்டி ஊக்குவிப்புத் தொகை வழங்கல்
* சேவையாளர்களைப் பாராட்டி மதிப்பளித்தல்
– இதனை நாம் நிறைவேற்ற நிதி தந்து ஆற்றளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களால் இயன்ற தொகையை வழங்குங்கள், தாயக உறவுகளைப் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுங்கள் என அதன் தலைவர் திரு கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.