யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடாரப்புப் பகுதியில் புத்தர் சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதப்பை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இதனை மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த தெப்பத்தில் மலையாள எழுத்து காணப்படுவதால் இது இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
அதேநேரம் இது புத்தர் சிலை ஏதும் வைப்பதற்கான நடவடிக்கையா என்றும் மக்கள் எழுப்புகின்றனர்.
இதேவேளை, கடந்த ஒரு மாத காலமாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பல்வேறு வடிவிலான மிதக்கும் தெப்பங்கள் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.