உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட் (Mr beast).
“ஜிம்மி டொனால்ட்சன்” என்ற இயற்பெயர் கொண்ட இவரது வீடியோக்கள், யூ-டியூப்பில் வைரலாகி இலட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம்.
ஆனால், இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த வீடியோக்களையும் பதிவிட்டது கிடையாது.
இந்நிலையில், சமீபத்தில் எக்ஸ் தளத்தின் அதிபர் எலான் மஸ்க், யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை எனக் கேள்வி கேட்டிறிந்தார்.
அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், “என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் வீடியோ தயாரிப்புச் செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்” என தனது தயக்கத்தை கூறியிருந்தார்.
அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர்.
எனினும், எலான் மஸ்க்கின் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், “எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன். அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க், அந்தப் பதிவை மறு பகிர்வு செய்து, “மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது” என கூறியுள்ளார்.
இதனையடுத்து மிஸ்டர் மஸ்க்கின் முதல் வீடியோ எக்ஸ் தளத்தில் 117 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.