உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதி வலேரி ஜலுன்ஸ்யி, அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கினால் திடீர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் விரிசல் இருந்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் ஜனாதிபதி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
ரஷியப் படைகள், உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தபோது வலேரி ஜலுன்ஸ்யி தலைமையிலான ஆயுதப்படை சிறப்பாக செயல்பட்டது. இதனால் “இரும்பு தளபதி” என அவர் அழைக்கப்பட்டார்.
ரஷியாவை தொடக்கத்தில் சமாளித்த போதிலும், அதன்பின் ரஷியப் படைகள் உக்ரைனுக்குள் சென்று பேரழிவை ஏற்படுத்தியது.
ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், தலைமை தளபதி நீக்கப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்படும் நபர் எப்படி படைகளை வழிநடத்திச் செல்வார் என கேள்வி எழுந்துள்ளது.