யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ச.கிருஸ்னேந்திரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக 7 ஆண்டுகள் பதவி வகித்த த.ஜெயசீலன் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், மாநகர சபையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ச.கிருஸ்னேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை 9 மணிக்குக் கடமையைப் பொறுப்பேற்றார்.
பூநகரி மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேசங்களில் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய கிருஸ்னேந்திரன், இவ்வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்ற நிலையில் இன்று யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராகப் பொறுப்பேற்றார்.