வெனிசுலா நாட்டின் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் அமைந்துள்ள சட்ட விரோத திறந்தவெளி தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு தொழிலாளர்கள் வேலை செய்த சந்தர்ப்பத்தில் தங்கச் சுரங்கத்தில் ஒரு பகுதி திடீரென இடித்து விழுந்த நிலையில், பல தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினார் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிலர் தங்க சுரங்கங்களில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு பணி தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை.