தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான லாஸ்யா நந்திதா (37), இன்று காலை ஐதராபாத் ஓ.ஆர்.ஆர். வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதி தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாதில் படுகாயமடைந்த நந்திதா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ஆனால் நந்திதா வழியிலேயே உயிரிழந்ததாகவும், சாரதி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
1986 -ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்த லாஸ்யா நந்திதாவின் தந்தை கடந்த வருடம் காலமான நிலையில், தந்தை போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.