ஸ்கொட்லாந்தில் புதிய வெறுப்பு குற்றச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சட்டமானது சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று “ஹாரி பாட்டர்” எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் மற்றும் சமூக ஊடக தளமான Xஇன் உரிமையாளர் எலான் மஸ்க் ஆகியோர் விமர்ச்சித்துள்ளனர்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதை அடுத்து, இணைய பதிவுகள் குறித்த புகார்கள் வெள்ளமாக வருமென எதிர்பார்ப்பதாக மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தச் சட்டமானது விவாதத்திற்குப் பிறகு 82 க்கு 32 என்ற வாக்குகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டதுடன், நான்கு பேர் வாக்களித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.