World Central Kitchen என்ற தொண்டு நிறுவனத்தின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து நடு நிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்நிறுவனத்தின் அதிகாரி ஹோசே ஆண்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமது ஊழியர்கள் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவத்துக்கு அப்பால் விசாரணைகள் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் மேற்படி தொண்டு நிறுவனத்தின் 7 நிவாரண ஊழியர்கள் உயிரிழந்தனர்.
அவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, போலந்து மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உதவி வாகனங்கள் சென்றதை ஆண்டர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாகனங்களில் நிறுவனத்தின் சின்னம் தெளிவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காஸாவுக்குள் கடல்வழியான கொண்டு செல்லப்பட்ட 100 டன் உணவை விநியோகித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.