வடக்கு இலண்டனில் 12 வயதுடைய சிறுமி உள்ளிட்ட யூதப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
28 வயதான முகமது அமீன் என்ற நபரால், மூன்று வருட காலப்பகுதியில் நான்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான மணிநேர சிசிடிவி காட்சிகளைத் தொகுத்து, சந்தேக நபரின் மோட்டார் சைக்கிள் வாடகை தரவுகள் மற்றும் ஜிபிஎஸ் மூலம் அவரது செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த நபர், ஸ்டாம்ஃபோர்ட் ஹில்லில், முக்கியமாக யூத சமூகத்தில் தனது இலக்குகளைத் தேடியதாக ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஃபின்ஸ்பரி பூங்காவைச் சேர்ந்த அமீன், 2021 இல் செய்த நான்கு குற்றங்களுக்காக இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
குறித்த நபரால் 12 வயது சிறுமி குறிவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், வெள்ளிக்கிழமை அவரது தண்டனை விசாரணையின் போது நீதிமன்றம் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.