சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை இன்று (26) நடந்த அரசமைப்பு சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 3 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் குறித்த பரிந்துரை மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை, அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.