மேற்கு இலண்டனில் உள்ள 17 வயது ஆயுத வியாபாரியை பட்டப்பகலில் கொலை செய்து கால்வாயில் தள்ளியதற்காக 18 வயது இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரப்ஸ் லேனில் உள்ள கிராண்ட் யூனியன் கால்வாய் அருகே 17 வயதான விக்டர் லீயைக் கொன்ற சம்பவத்தில் எலிஜா கூகோல்-மெலி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த இளைஞனுக்கு வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சம் 20 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 ஜூன் 2023 அன்று, மாலை 5.30 மணியளவில் விக்டர் கத்தியால் குத்தப்பட்டு கால்வாயில் தள்ளப்பட்டார் என்று நீதிமன்ற விசாரணையில் அறிவிக்கப்பட்டது.
அயலவர்கள் மற்றும் அவசரகால சேவைகளின் விரைவான மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அலைபேசி தரவுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் சான்றுகள் ஆகியவற்றின் விரிவான பகுப்பாய்வு மூலம் துப்பறியும் நபர்கள் கூகோல்-மெலியை குற்றத்துடன் தொடர்புபடுத்தினர்.
பிரதிவாதியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட கத்தியில் விக்டரின் இரத்தமும் கூகோல்-மெலியின் டிஎன்ஏவும் இருந்தன.
விசாரணையில், விக்டரின் பைக் மற்றும் கத்திகள் இருந்ததாகக் கருதப்படும் ரக்சாக் ஆகியவற்றை கூகோல்-மெலி திருடிச் சென்றது கொள்ளை நோக்கமானது என்பது தெரியவந்தது.