மத்திய இலண்டனில் பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் பார்க் லேனில் இருந்து டவுனிங் ஸ்ட்ரீட் வரை ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
எதிர்ப்பாளர் ஒருவரை நோக்கி நாஜி வணக்கம் செலுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் பதாதைக்காக இரண்டாவது கைது இடம்பெற்றதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேலும் இருவர் தாக்குதல் நடத்தும் பதாதகை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
“நதியிலிருந்து கடல் வரை பாலஸ்தீனம் சுதந்திரமாக இருக்கும்”, “சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்” மற்றும் ” ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், நாம் அனைவரும் பாலஸ்தீனியர்கள்” ஆகிய பிரபலமான பதாகைகள் மற்றும் முழக்கங்கள் அணிவகுப்பின் போது பயன்படுத்தப்பட்டன.