இந்த வார தொடக்கத்தில் பேருந்து மோதியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
ஒன்பது வயதான சிறுமி மற்றும் அவரது 5 வயது சகோதரர் ஆகியோர் சனிக்கிழமை, தெற்கு இலண்டனில் காலை 9 மணியளவில் பேருந்தில் மோதி விபத்துக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து, சிறுமியும் சாகோதரனும் காயங்களுடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 5 திகதி சிறுமி உயிரிழந்தார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தியதன் மூலம் பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டார்.
ஹல்கோட் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் உள்ள வாட்லிங் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போக்குவரத்து பொலிஸாரின் துப்பறியும் நபர்கள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.