அவசர சேவை விநியோகங்களுக்கும் ஆளில்லா விமானங்களை அனுப்ப இங்கிலாந்தில் சோதனை செய்து பார்க்கப்படவுள்ளது.
அது போன்ற பயன்பாடுகளுக்காக மேலும் அதிகமான ஆளில்லா விமானங்களுக்கு அனுமதி வழங்கப்போவதாக இங்கிலாந்தின் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.
அதன்படியே, அவசர சேவை விநியோகங்களுக்கும் ஆளில்லா விமானங்களை அனுப்ப சோதிக்கப்படவுள்ளது.
தற்போது இங்கிலாந்தில் கடுமையான நிபந்தனைகளுடன் நடத்தப்படும் சோதனைகளில் மட்டும் பார்வைக்கு எட்டாத தூரத்திற்கு ஆளில்லா விமானங்களை பறக்கவிட அனுமதி உண்டு.
இங்கிலாந்தின் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் 6 திட்டங்களைத் தெரிவுசெய்துள்ளது. அந்த நிறுவனங்கள் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆளில்லா விமானங்களைப் பறக்கவிடலாம்.
Amazon நிறுவனத்தின் Prime Air எனும் ஆளில்லா விமான விநியோகச் சேவை, கடலோர நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் Airspection திட்டம் மற்றும் மருத்துவப் பொருள்களை விநியோகம் செய்யும் Project Lifeline எனும் திட்டம் ஆகியவை ஆணையம் தெரிவுசெய்துள்ள திட்டங்களில் உள்ளடங்குகின்றன.