Piccadilly line-இன் வடக்குப் பகுதி சனிக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று இலண்டனுக்கான போக்குவரத்து கழகம் (TfL) தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் 94 புதிய குளிரூட்டப்பட்ட ரயில்களுக்கான பாதையை தயார் செய்ய செப்டம்பர் 1 ஆம் திகதி வரை Cockfosters மற்றும் Wood Green இடையே எந்த சேவையும் இருக்காது.
இரண்டு நிலையங்களையும் இணைக்கும் ரயில்வே மாற்றுப் பேருந்துகள் ஓக்வுட், சவுத்கேட், அர்னோஸ் குரோவ் மற்றும் பவுண்ட்ஸ் கிரீன் ஆகிய இடங்களுக்கும் செல்லும்.
அர்னோஸ் க்ரோவ் பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் crossings ஆகியன புதுப்பிக்கப்படும்,
அதே போல் Cockfosters பகுதியில் ரயில்களுக்கான மேம்படுத்தல் வசதிகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.