நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் எம்.வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே இன்று (20) கைகலப்பு ஏற்பட்டது.
திகாம்பரம் (நுவரெலியா மாவட்டம்), வேலுகுமார் (கண்டி மாவட்டம்) ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்குக் கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர்.
எனினும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய விவாத நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கட்சி தாவல் தொடர்பான கருத்து மோதல் இறுதியில் கைகலப்பாக மாறியது.
வேலுகுமார் எம்.பி. மீது திகாம்பரம் எம்.பியே முதலில் தாக்குதல் நடத்தினார். பதிலுக்கு வேலுகுமார் எம்.பியும் திகாம்பரம் எம்.பி. மீது தாக்குதல் நடத்தினார். இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“திகாம்பரம் – வேலுகுமார் கைகலப்பு அசிங்கமான அரசியலின் வெளிப்பாடு. ஜனநாயக அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியாக மோத முடியாத இருவரின் இயலாமையே இது.” – என்று புத்திஜீவிகள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.