ரெய்ன்ஹாமில் உள்ள இங்க்ரெபோர்ன் ஹில் கன்ட்ரி பூங்காவில் ஏற்பட்ட தீயை அணைக்க சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
கிழக்கு இலண்டனில் சுமார் ஐந்து ஹெக்டேர் புல் மற்றும் புதர்கள் தீயில் எரிந்து நாசமானது
அதிக புகை மூட்டத்தால் உள்ளூர்வாசிகள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக இலண்டன் தீயணைப்பு படை நிலைய கமாண்டர் பிரையன் ஓ’கீஃப் கூறினார்.
வெள்ளிக்கிழமை மாலை 5.44 மணியளவில் படையணி அழைக்கப்பட்டு இரவு 8.05 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Ilford, Romford, East Ham மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.