ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத் தேர்வு கணக்கிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தலைவர் எல் ரத்நாயக்க, இன்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனவே, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகுதியில் அல்லது நாளை முற்பகுதி வரை தாமதமாகலாம் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான இடைவெளி குறைவடைந்துள்ளது.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி,