1
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதித பீரிஸ் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு முன், அவர் அரசாங்கத்துக்கு சொந்தமான எல்பி எரிவாயு விநியோக நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளராக பணியாற்றினார்.
அத்துடன், Litro Gas Lanka Ltd மற்றும் Litro Gas Terminal Lanka (Pvt) Ltd ஆகிய இரண்டு நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.