2
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்துக்கான மாற்றுவழி” எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) நடைபெற்றது.
தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.