போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வானத்தை ஓட்டிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் செலுத்திய பஸ் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க பாதசாரி ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார்.
குரோய்டனில் உள்ள ஜோர்ஜ் தெருவில் சனிக்கிழமை மதியம் 1.10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கிழக்கு குரோய்டன் ஸ்டேஷன் அருகே, சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணை நடத்தியதால், இரு திசைகளிலும் அந்த வீதி மூடப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்ற சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
“சனிக்கிழமையன்று 13.09 மணி அளவில் குரோய்டனில் உள்ள ஜோர்ஜ் தெருவுக்குப் பேருந்து ஒன்றும் பாதசாரியும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, பொலிஸார் அழைக்கப்பட்டதாக ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.