குரு அருள் நிறைந்திருக்கக் கூடிய நாள் வியாழக்கிழமை. கல்வி உட்பட பல கலைகளை கற்றுக் கொள்வதற்காக, அதனை தொடங்குவதற்கான அற்புத நாள். இந்த நாளில் கலைகளை கற்றுக் கொள்ளத் தொடங்க குருவின் அருளால் சிறப்பாக கற்றுத் தேர முடியும். புதிதாக தியானப் பயிற்சி தொடங்க, ஜாதகம் பார்த்தல், ஆலய தரிசனம் செய்ய ஏற்ற நாள்.
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழன் விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.