இங்கிலாந்தில் 35 வருடங்களாக நடைபெறும் விநோத ஓட்டப்போட்டி தொடர்பில் BBC நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, 24 மணிநேரம் தொடர் ஓட்டப்போட்டியாக இப்போட்டி நடைபெறுகிறது. போட்டி முடியும் வரை இடைவேளை ஏதும் இருக்காது. போட்டியாளர்கள் நீர் அருந்துவதையும் சாப்பிடுவதையும்கூடத் தொடர்ந்து ஒடியவாரே செய்ய வேண்டும்.
இவ்வாண்டு நடைபெற்ற இந்த 24 மணிநேர தொடர் ஓட்டப்போட்டியில் 42 பேர் பங்குபெற்றதாகக் கூறப்பட்டது. அவர்களில் 84 வயது மூதாட்டி ஒருவரும் பங்குபற்றியுள்ளார். அவர் 19 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் கலந்துகொள்கிறார்.
இந்த 24 மணிநேர தொடர் ஓட்டப்போட்டியில் சற்றும் ஓய்வின்றி ஓடுவதால் சிலர் காயங்களாலும் உடல் நலக் குறைவாலும் பாதியிலேயே விலகவும் நேரிடுகிறது.
கடுமையான உடல் வலி, சோர்வு இவற்றைச் சற்றும் பொருட்படுத்தாமல் 29 போட்டியாளர்கள் இவ்வாண்டு போட்டியை முடித்ததாக BBC தெரிவித்தது.
போட்டியை முடித்தவர்களால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. கோப்பைகள் அவர்கள் இருந்த இடத்திற்குக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன.
போட்டியாளர்கள் ஆர்வத்தோடு முன்வரும் வரை இலாப நோக்கமில்லா இந்தப் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.