புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஒரே நாளில் விமான டிக்கெட்டுகளை ரத்துசெய்த 68,000 பயணிகள்!

ஒரே நாளில் விமான டிக்கெட்டுகளை ரத்துசெய்த 68,000 பயணிகள்!

1 minutes read

தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்தால் அச்சமடைந்த பயணிகள் பலர் தமது விமான டிக்கெட்டுகளை ரத்துசெய்துள்ளனர்.

அதன்படி, ஒரே நாளில் 68,000 பயணிகள் தங்கள் விமானச்சீட்டுகளை ரத்துசெய்துள்ளதாக Jeju Air நிறுவனம் தெரிவித்தது.

முவான் (Muan) விமான நிலையத்தில் Jeju Air விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி : விமான விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

இதனால் அச்சமடைந்த பயணிகள், தங்கள் விமானச்சீட்டுகளை ரத்துசெய்துள்ளதாக Jeju Air நிறுவனம் தெரிவித்தது. குறிப்பாக, மேற்படி விபத்தில் சம்பந்தப்பட்ட போயிங் 737-800 ரக விமானங்களைத் தவிர்க்கவும் பயணிகள் முற்படுகின்றனர்.

மேலும், தங்களுடைய பயணத்தில் எந்த ரக விமானம் பயன்படுத்தப்படும் என்று பயணிகள் பலர் கேட்பதாகப் பயண முகவர் நிறுவனங்கள் கூறியுள்ளன. போயிங் 737-800 ரக விமானச் சீட்டுகளை ரத்துசெய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்வதாக அவை தெரிவித்தன.

தென் கொரியாவில் மிகப் பெரிய பயண முகவர் நிறுவனத்தில் ஒன்று, விமானச்சீட்டுகளை ரத்துசெய்யும்படி 400 பேரிடமிருந்து அழைப்பு பெற்றுள்ளதாக தெரிவித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More