செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில்!!!

இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில்!!!

3 minutes read

மனிதன் தனது புத்திசாலித்தனம் மற்றும் புதிய புதிய அறிவியல்கண்டுபிடிப்புகள் மூலம் இயற்கையை வென்று விட துடிக்கிறான். இறைவனின் படைப்புகளில் உள்ள இயற்கை ரகசியங்களை அறிந்து கொள்ள கடும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறான். அந்த ஆராய்ச்சிகளின் பலனாக பல உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தை நோய்த் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தனை இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டது. மரணம் இல்லா பெருவாழ்வு காண மனிதன் ஆசைப்படுகிறான். இந்த உலக வாழ்க்கையிலும் அதன் சுகங்களிலும் நவீனங்களிலும் முழ்கித் திளைத்துப்போன அவன் நீண்ட காலம் வாழ விரும்புகிறான்.

அதன் விளைவு தான் இறந்த பின் மனித உடலை பதப்படுத்தி வைப்பது.

விஞ்ஞானமும் மருத்துவமும் வளரும் போது, அதாவது இன்னும் 20 ஆண்டுகளுக்குள் மரணத்தை விஞ்ஞானிகள் வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.அப்படி ஒரு நிலை உருவாகும் போது பதப்படுத்தப்பட்டுள்ள தங்கள் உடலுக்கும் உயிர் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.செத்தவர்களை பிழைக்க வைக்கும் இந்த ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான அதிசய தகவல்களை இந்த வாரம் காண்போம்.

மனித வாழ்வு நிலை இல்லாதது. மனிதனின் பிறப்பையும் இறப்பையும் யாராலும் நிச்சயமாக சொல்ல முடியாது.

வயது அதிகமாக அதிகமாக மனிதனுக்கு உடல் தளர்ந்து முதுமை ஏற்படும்.இது தவிர பழக்க வழக்கங் கள் மற்றும் நோய் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணம் அல்லது உடல் உறுப்புகள் சேதம் அடைதல் போன்ற ஆபத்துகளும் ஏற்படும்.

மனித உயிர்களை பறிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது இதய நோயாகும்.இந்த நோய்க்கு ஆபரேஷன் மற்றும் மருந்துகள் இருந்தாலும் சில நேரங்களில் அவை பலன் தருவதில்லை. அது போன்ற சூழ்நிலையில் மாற்று இருதயம் பொருத்துதல் அல் லது செயற்கை இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது போல எத்தனையோ வசதிகள் நவீன மருத்துவங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மனித உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மருந்துகளும் மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்படும் போது நமக்குள் ஒரு எண்ணம் தோன்றும். அதாவது, இந்த மருத்துவ முறை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் என் தந்தையை மரணத்தில் இருந்து காப்பாற்றி இருப்பேன், என்பதாக இருக்கும். இதே போல சிலருக்கு தாய், மனைவி, குழந்தை, சகோதர சகோதரிகள்… என்று காப்பாற்ற வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இது போன்ற நிலையில் இருந்து மனிதர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ளது தான் கிரையோஜெனிக் முறை.

இயற்கையாக மரணம் அடைந்த பின்னர் ஒருவரது உடலை குளிர் நிலையில் பதப்படுத்தி வைப்பது தான் கிரையோஜெனிக் முறையாகும்.

வருங்காலத்தில் செத்தவர்களை பிழைக்க வைக்கும் ரகசியங்களை கண்டுபிடிக்கும் போது இந்த உடல்களை எடுத்து அவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

அது சரி செத்தவர்களை எப்படி பிழைக்க வைக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.

ஒருவருக்கு மரணம் என்பது பல வழிகளில் ஏற்படலாம். இருப்பினும் இயற்கையாக-பொதுவாக ஒருவரது மரணம் என்பது இருதய துடிப்பு நின்று போவது தான். இருதயம் செயல்படுவது நின்று போன பிறகு உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதன் காரணமாக முதலில் இருதயமும் பின்னர் அதைத் தொடர்ந்து உடலின் பிற பாகங்களும் செயல் இழக்கின்றன. இருதயம் நின்றுபோன பிறகும் சில மணி நேரங்களுக்கு மூளையின் முக்கிய திசுக்கள் உயிரோடு இருக்கும். அந்த மூளை திசுக்களை பாதுகாப்பது தான் இந்த கிரையோ ஜெனிக் முறையின் முக்கிய அம்சமாகும். இந்த தொழில் நுட்பத்தின் படி ஒருவர் மரணம் அடைந்ததும் தனது உடலை பாதுகாக்க விரும்பினால் அதை செய்து கொடுக்க பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனத்தினர் தங்களிடம் பதிவு செய்தவர்கள் இயற்கையாக மரணம் அடைந்த தகவலை அறிந்ததும் உடனே அவரது வீட்டுக்கு விரைந்து சென்று உடலை தங்களது அலுவலகத்துக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு அந்த உடலின் திசுக்கள் மற்றும் பிறபாகங்களில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி முதலில் நடக்கிறது. திசுக்களில் தண்ணீர் இருந்தால் அதன் காரணமாக அந்த உடல் சீக்கிரம் அழுகி விடும். எனவே முதலில் உடலில் உள்ள தண்ணீர் அகற்றும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலுக்குள் கிளிசரால் மற்றும் சில ரசாயன கல வைகளை செலுத்துகிறார்கள். இதன் மூலம் உடல் குளிர்விக்கப்படும் போது உறை நிலையில் பனிக் கட்டியாக மாறுவதில்லை. மேலும் சாதாரண நிலைக்கு மீண்டும் உடலை கொண்டு வரும்போது அது எந்த மாற்றமும் இன்றி பழைய நிலைக்கு அடைய இந்த ரசாயன கலவை உதவுகிறது.

உடலை பாடம் செய்த பின்னர் அதை குளிர வைக்கும் பணி நடைபெறுகிறது. பின்னர் அந்த உடலை ஒரு குளிர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர்.

இந்த முறைப்படி மனித உடல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உடலை பாது காக்கும் பணியில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அள வுக்கு உடல் குளிர் விக்கப்பட்டாலும் அது பனிக்கட்டி போல உறை நிலையை அடைவதில்லை.

கிரையோஜெனிக் முறைப்படி உடலை பதப்படுத்த பலர் ஆர்வம் காட்டினாலும் இது வரை யாரையும் உயிர்ப்பிக்கும் சாதனை நடக்கவில்லை. நானோ டெக்னாலஜி (சஹஙூச் பக்ஷகுஙூச்ஙீச்கீட்) எனப்படும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில் வரும் என்பது விஞ்ஞானிகளின் கனவாக இருக்கிறது.

இந்த தொழில் நுட்பம் மூலம் சேதம் அடைந்த மனித திசுக்களை புதுப்பிக்க முடியும் என்ற அளவுக்கு இப்போதைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இது தொடருமானால் 2040-ம் ஆண்டில் இறந்தவரை பிழைக்க வைக்கும் அதிசயம் நடக்கும் என்கிறார்கள்.

 

நன்றி : பனித்துளி சங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More