சீனாவின் இராணுவத்தினர் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதார தடையை விதித்ததை அடுத்து ஹொங்கொங்கில், அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று நங்கூரமிடுவதை சீனா தடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவின் 1000க்கும் அதிகமான அதிகாரிகளுடனான யு.எஸ்.எஸ்.வாஸ்ப் என்ற தாக்குதல் கப்பல் ஹொங்கொங்கில் நங்கூரமிடவிருந்தது.
எனினும் இதனை சீனா தடுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அமெரிக்காவின் யுத்தக் கப்பல்களது விஜயத்தை சீனா ரத்து செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.
இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு யு.எஸ்.எஸ்.ஜோன் சீ விமான தாங்கி கப்பல் ஹொங்கொங் செல்ல சீனா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.