போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு, கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் யோசனையில் யாழ் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுடன் இணைந்து குறித்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இந்திய அதிகாரிகள் குழு ஒன்று பலாலிக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தியிருந்தது. தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் அந்த நாட்டின் விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில் பலாலி விமான நிலைய சாத்தியப்பாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.