இந்திய எழும்பியல் அமைப்பு, கங்கா மருத்துவமனை மற்றும் உயிர் அமைப்பு இணைந்து சாலை விழிப்புணர்வுக்காக LOACON 2018 மரதன் ஓட்டப்பந்தயத்தை பிரமாண்டமான முறையில் கடந்த சனிக்கிழமை டிசம்பர் 01 ஆம் தேதி கோவையில் நடத்தின.
கோவை கொடிசியா அரங்கில் தொடங்கிய இந்த மரதனில் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், எலும்பியல் மருத்துவர்கள், தொழில் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என திரளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 6 மணி அளவில் தொடங்கிய மரதன் ஓட்டத்தினை கோவை நகரின் போக்குவரத்து காவல்துறை ஆணையாளர் சுஜித்குமார் முன்னிலையில், இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார்.
இந்த மரதன் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் என் ஜி பி கல்லூரி மாணவிகளான , சோனியா, ஜெ.கவியரசு, வி.கோகிலா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆண்கள் பிரிவில் கிருபாகரன் முதலிடத்தையும், ஆனந்த் இரண்டாமிடத்தையும், கௌதம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
எழும்பியல் மருத்துவர்கள் பிரிவில் அருணுதயா சித்தார்த்தன் முதலிடம், உமேஷ் யாதவ் இரண்டாவது இடம், ஸ்ரீனிவாச ரெட்டி மூன்றாமிடம் பிடித்தனர். பெண் எலும்பியல் மருத்துவர் பிரிவில் உர்மிளா குரா ணா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சாலைப் பாதுகாப்பின் விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதிலும் இருந்து எலும்பியல் மருத்துவர்கள் இந்த மரதனில் திரளாக கலந்து கொண்டனர். இந்த மரதன் ஓட்டப்பந்தயத்திற்கான ஏற்பாடுகளை பிரஸாண்டீம் ஈவெண்ட் மானேஜ்மேண்ட் நிறுவனம் கவனித்துக்கொண்டனர்.